நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சிக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 13 ஊராட்சிகளில் பணிபுரியும் 250 தூய்மை பணியாளர்களுக்கான தூய்மை பாரத இயக்கம் 2024 திட்டத்தின் கீழ் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று துவக்கி வைத்தார். பின்னர் முகாமில் பேசியவர், புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக திகழும் நீலகிரி மாவட்டத்தை தூய்மையாகவும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருப்பதில் தூய்மை பணியாளர்களின் பங்கு மிகவும் முதன்மையானது.
இதனால் தூய்மை பணியாளர்களின் உடல்நலத்தை பாதுகாப்பாக சுகாதாரத்துடன் வைத்துக் கொள்ள உதகை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் இலவச மருத்துவ முகாமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சை பெற கூடிய தூய்மை பணியாளர்கள் உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பயனடையும் வகையில் இம்முகாமினை தூய்மை பணியாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார்.
இதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு கண், எலும்பு மற்றும் இதயம் தொடர்பான பரிசோதனைகள் நடைபெற்றது. இம்முகாமில் கூடுதல் ஆட்சியர் கௌஷிக் உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.