கோவை மாவட்டம் வடவள்ளி மருதமலை சாலையில் அமைந்துள்ள அருள்மிகு வீரமாச்சி அம்மன் கோவிலில் இன்று(செப்.18) மகா சண்டி ஹோமம் நடைபெற்றது. உலக நன்மைக்காகவும், உலக மக்கள் ஒற்றுமையுடன் வாழ யாகம் நடத்தியதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். வீரமாச்சி அம்மன் வெள்ளி கவசத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரண்டு நாட்கள் நடைபெற்ற சண்டி யாகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.