ரயிலில் பிடிபட்ட 4 கிலோ கஞ்சா- கடத்தியவருக்கு வலைவீச்சு!

68பார்த்தது
ரயிலில் பிடிபட்ட 4 கிலோ கஞ்சா- கடத்தியவருக்கு வலைவீச்சு!
கோவையில் ஏராளமான கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் இருப்பதால் கல்லூரி மாணவர்கள் மற்றும் வாலிபர்களை குறி வைத்து கஞ்சா கடத்தி விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வருகின்றனர்.

வட மாநில தொழிலாளர்களை போல துணிப்பைகுள் கஞ்சா பதுக்கி வைத்து கடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கோவை வழியாக கேரளா செல்லும் வட மாநில ரயில்களில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சூப்பிரண்டு ஜெயராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் குமரேசன், சப் இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் தலைமையில் ரயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் திடீர் சோதனை நடைபெற்றது.

அப்போது நேற்று (செப் 16) கோவைக்கு வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பையில் நான்கு கிலோ கஞ்சா இருந்தது. இது ஒடிசா மாநிலத்தில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது. ஆனால் அதனை கடத்தி வந்தவர்கள் நைசாக தப்பிவிட்டனர். கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி