கோயம்புத்தூர் - Coimbatore

கோவை: மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கோவை: மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை (Re-enquiry) இன்று (23. 10. 2024) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவர்கள் தலைமையிலும், சட்ட ஆலோசகர் உடன் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இன்று (அக்.,23) நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 70 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 1 மனு மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட்டும், 1 மனு மீது மனு ரசீது பதிவு செய்யப்பட்டும் (CSR), 51 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 17 மனுக்கள் மீது மே‌ல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது. இந்த மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

வீடியோஸ்


கோயம்புத்தூர்
Oct 24, 2024, 04:10 IST/கவுண்டம்பாளையம்
கவுண்டம்பாளையம்

தடாகம்: புகை போக்கி கோபுரம் இடிப்பு!

Oct 24, 2024, 04:10 IST
கோவை மாவட்டம் தடாகம் பள்ளத் தாக்கில் 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இருந்தன. இவை சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையான அனுமதி பெறாமலும், அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து இயங்கி வந்தன. சமூக ஆர்வலர்கள் தொடுத்த வழக்கின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் செங்கல் சூளைகளின் மின் இணைப்பை துண்டித்து, மூடி சீல் வைக்க உத்தரவிட்டது. இதன் காரணமாக கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக செங்கல் சூளைகள் இயங்காமல் இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு, ஒரு செங்கல் சூளையின் புகை போக்கி கோபுரம் கோவை மன்னார்காடு நெடுஞ்சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த நெடுஞ்சாலையில் 60க்கும் மேற்பட்ட கோபுரங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கே. எஸ். பி செங்கல் சூளைக்கு சொந்தமான புகை போக்கி கோபுரத்தை அதன் உரிமையாளர்கள் பாதுகாப்பு கருதி, கிரேன் உதவியுடன் அக்டோபர் நேற்று இடித்தனர். தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழுவினர், நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் இருக்கும் மற்ற புகை போக்கிகளையும் இடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.