இராசிபுரம்: பேருந்து நிலையம் குறித்து ஆலோசனை கூட்டம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நாளை 25ந் தேதி 4 மணி அளவில் ஸ்ரீதேவி திருமண மண்டபத்தில் பல்வேறு கட்சிகள் பிரதிநிதிகள், பேருந்து நிலைய மீட்பு குழு, இராசிபுரம் மக்கள் நலக்குழு, வணிகர் மற்றும் சேவை அமைப்புகளின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக இன்று 24ந் தேதி ராசிபுரம் பேருந்து நிலையம் மீட்பு குழுவினர் துண்டு பிரசுரங்களை கொடுத்தனர்.