
கொல்லிமலை: கஞ்சா.. நாட்டு துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது
கொல்லிமலை வட்டம், வளப்பூா் நாடு பெரியகோயில் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லதுரை விவசாயி. இவா் தனது நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளாா். அந்த தோட்டத்தில் கஞ்சா மற்றும் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக வாழவந்திநாடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் ஆய்வு செய்த போலீசார் தோட்டத்தில் கஞ்சா பயிர் வைத்திருந்த விவசாயி செல்லதுரை கைது செய்து அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்தனர்.