நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய விலை நிர்ணயம் நாளை நவ.25 காலை முதல் அமலுக்கு வரும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. குளிர்காலம் தொடங்கியுள்ளதால் முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதால் விலை உயர்வு என தகவல் வெளியாகியுள்ளது. சபரிமலை சீசனிலும் முட்டையின் விலை உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.