
கொல்லிமலை: கள்ளச்சாராயம் குறித்து விழிப்புணர்வு
கொல்லிமலை மலைவாழ் மக்கள் இடையே கள்ளச்சாராயம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் இன்று காலை கொல்லிமலையை பகுதிக்குச் சென்று அங்குள்ள மலைவாழ் மக்களிடையே கள்ளச்சாராயம் குடிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் காவல்துறைக்கு ரகசிய தகவல் கொடுக்க வேண்டும் என எஸ்பி எடுத்துரைத்தார்.