நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் ஆர். சி. எம். எஸ்-சில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ஆர். சி. எச் ரகம் குறைந்தபட்சம் ரூ. 7059 முதல் அதிகபட்சம் ரூ. 8260 வரையும், டி. சி. எச் ரகம் குறைந்தபட்சம் ரூ. 9269 முதல் அதிகபட்சம் ரூ. 10,312 வரையும், கொட்டு ரகம் குறைந்தபட்சம் ரூ. 4,690 முதல் அதிகபட்சம் ரூ. 5,790 வரையிலும் என மொத்தம் 902 மூட்டை பருத்தி ரூ. 72 லட்சத்திற்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.