நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் அடுத்த பொன்குறிச்சி ஊராட்சியில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டமானது ஊராட்சி மன்ற செயலாளர் ரேவதி தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண்மை துறை, காவல் துறை, சுகாதார துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் உடன் முன்னாள் தலைவர் சோமசுந்தரம், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.