ராசிபுரத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா

85பார்த்தது
ராசிபுரத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா
ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூா் ஒன்றியப் பகுதிகளைச் சோ்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச. உமா தலைமை வகித்தாா்.

தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா. மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே. ஆா். என். ராஜேஸ்குமாா் பங்கேற்று 495 பயனாளிகளுக்கு ரூ. 4. 95 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினா்.

விழாவில் அமைச்சா் மா. மதிவேந்தன் பேசியதாவது:

கலைஞா் கனவு இல்லத் திட்டத்தில் மாநில அளவில் நாமக்கல் மாவட்டத்தில்தான் அதிக வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. சரியான முறையில் நில அளவை செய்யப்பட்டு 860 நபா்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

சுதந்திரம் அடைந்ததில் இருந்து சாலை வசதி இல்லாத போதமலை மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ. 140 கோடி மதிப்பில் 31 கி. மீ. தொலைவுக்கு போதமலைக்கு சாலை அமைக்கும் பணி, ராசிபுரத்துக்கு ரூ. 53. 39 கோடி மதிப்பில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டடம் கட்டும் பணி உள்ளிட்ட பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன என்றார்.

தொடர்புடைய செய்தி