அனிச்சம்பாளையம் காவிரிக் கரையோரப் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

56பார்த்தது
அனிச்சம்பாளையம் காவிரிக் கரையோரப் பகுதியில் ஆட்சியா் ஆய்வு
பரமத்தி வேலூா் வட்டம், அனிச்சம்பாளையம் காவிரிக் கரையோரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ச. உமா, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

அனிச்சம்பாளையத்தில் காவிரிக் கரையோரப் பகுதியில் கதவணை அமைக்கும் இடத்தில் மாவட்ட ஆட்சியா் ச. உமா ஆய்வு மேற்கொண்டு பின்னா் கூறியதாவது:

பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் காவிரிக் கரையோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாக்க சமுதாயக் கூடம், திருமண மண்டபம், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தேவையான அடிப்படை வசதிகளுடன் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள துணை ஆட்சியா் நிலையில் அனைத்துத் துறை அலுவலா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அனைத்துப் பகுதிகளும் தொடா் கண்காணிப்பில் உள்ளன.

உள்ளாட்சி, நகராட்சி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு அளிக்கப்பட்டு வருகிறது. காவல் துறை, வருவாய் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலைகள் துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

இயற்கை பேரிடா்கள் குறித்து பொதுமக்கள் 1077 கட்டணமில்லா தொலைபேசி எண், 04286-299137 என்ற கட்டுப்பாட்டு அறை எண்களை தொடா்பு கொள்ளலாம் என்றாா்

தொடர்புடைய செய்தி