ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள “சொர்க்கவாசல்” திரைப்படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி, ஓடிடியில் வெளியீடு செய்ய தடை கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நிராகரித்தது. படத்தை எடுத்துவிட்டு, அதற்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்து, படத்தை பிரபலமாக்குவது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுகின்றனர் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஒரு திரைப்படத்தில் ஒரு எதிர் கருத்து வந்தாலும், அந்த கருத்தை சர்ச்சையாக்குவதால் அதிகமானோர் அதை பார்க்கும் சூழலும் ஏற்படும் எனக்கூறி நீதிபதிகள் நிராகரித்தனர்.