ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் இருந்து, WHO தலைவர் டெட்ரோஸ் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். சனா விமான நிலையத்திற்கு அவர் வந்திருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது. அந்த தாக்குதலின்போது அவருடன் இருந்த இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையத்தில் இருந்து, விமானத்தில் ஏற முற்பட்ட போது, இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடாத்தியிருந்ததாக கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.