கோயம்புத்தூர்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசை கண்டித்து இன்று (டிச.27) தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். பின்னர், அங்கு கூடியிருந்த தொண்டர்களிடம் சென்று பேசினார். அப்போது, அங்கிருந்த பெண் தொண்டர்கள், “நாங்களும் சாட்டையால் அடித்துக் கொள்கிறோம், எங்களிடம் சாட்டையை கொடுங்க அண்ணா” என அண்ணாமலை கையை பிடித்துக்கொண்டு கண்ணீர் மல்க கதறினர். தொடர்ந்து, அவர்களை சமாதானப்படுத்திய அண்ணாமலை, அங்கிருந்து அனுப்பி வைத்தார்.