மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய மோடி

65பார்த்தது
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) நேற்று (டிச.26) காலமானார். இந்நிலையில், இன்று (டிச.27) பிரதமர் மோடி அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன், அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இருந்தனர். தொடர்ந்து, மன்மோகன் சிங் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக, நேற்று மன்மோகன் சிங் இறந்த செய்தியை அறிந்தவுடன் அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, செல்போன் மூலம் அழைத்து ஆறுதல் கூறினார்.

நன்றி: TamilJanamNews

தொடர்புடைய செய்தி