பாலைவனத்திற்கு நடுவே வளர்ந்த துபாய் நகரத்தில் எங்கு சென்றாலும் வாகனத்தில் தான் செல்ல வேண்டும். மொத்த ஜனத்தொகையில் 13% பேர் மட்டுமே நடைபாதையை பயன்படுத்துகின்றனர். அதற்கு காரணம் அங்கு நிலவும் கடுமையான வெப்பமும், பாலைவனப் புழுதியும் தான். சாலையில் நடக்கும் பாதசாரிகளின் சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் 6,500 கிலோ மீட்டருக்கு 'துபாய் வாக்' என்ற குளிரூட்டப்பட்ட நடைபாதை அமைக்கப்பட உள்ளது.