16 வயது சிறுவனை பல்வேறு இடங்களுக்கு கூட்டிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் கைது செய்யப்பட்டார். கேரளாவின் கொல்லம் அருகே சாவரா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகுட்டி (19). இவர் டிச., 1ஆம் தேதி சிறுவனை தன்னுடன் கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். மைசூர், பாலக்காடு, பழனி உள்ளிட்ட பல இடங்களுக்கு இருவரும் சென்றுள்ளனர். சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பத்தனம்திட்டா பேருந்து நிலையத்தில் வைத்து நேற்று ஸ்ரீகுட்டி கைது செய்யப்பட்டார்.