கபிலர்மலை அருகே இருக்கூர், வலசுப்பாளையம் பகுதியில் தனியார் கல்லூரி மற்றும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி மற்றும் பள்ளிக்கு அருகே மின்சார வாரியம் சார்பில் ட்ரான்ஸ்பார்மர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார ட்ரான்ஸ்பார்மர் திடீரென வெடித்தது. இந்த நிலையில் பள்ளியின் அருகே இருந்த முள்வேலியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதைப் பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
இருப்பினும் காற்று அதிகமாக இருந்ததால் தீ வேகமாக எரிய தொடங்கியது. இதுகுறித்து உடனடியாக வேலாயுதம் பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த நிலையை அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து மேலும் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.