நவம்பர் மாதத்தில் இந்தியாவின் ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 8.5% அதிகரித்து ரூ.1.82 லட்சம் கோடியாக உள்ளது. டிசம்பர் 1-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி மத்திய ஜிஎஸ்டி ரூ.34,141 கோடியும், மாநில ஜிஎஸ்டி ரூ.43,047 கோடியும் அடங்கும். கடந்த ஆண்டு நவம்பரை ஒப்பிடும்போது இது 8.5% அதிகம் என்றாலும், கடந்த அக்டோபர் மாதம் வசூலான ரூ.1.85 லட்சம் கோடியிலிருந்து குறைவே ஆகும். கடந்த மாதத்தை ஒப்பிடும்போது 2.7% வீழ்ச்சியடைந்துள்ளது.