நான்கு வழிச்சாலை பணிக்காக மாரியம்மன் கோயில் இடிப்பு

57பார்த்தது
நான்கு வழிச்சாலை பணிக்காக மாரியம்மன் கோயில் இடிப்பு
திண்டிவனம் - மரக்காணம் வரையிலான இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இதில், திண்டிவனம் அடுத்த மன்னார்சாமி கோயில் அருகே பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோயில் நான்கு வழிச்சாலை பகுதியில் அமைந்துள்ளதால், கோயிலை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி பொக்லைன் மூலம் முத்துமாரியம்மன் கோயில் நேற்று (டிச. 01) இடித்து அகற்றப்பட்டது. இதன்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி