கட்டிடக்கலைக்கு சான்றாகவும், சிற்பங்களின் சிகரமாகவும், கலைகளின் கருவூலமாகவும் திகழ்கிறது தஞ்சை பெரிய கோயில். இந்த கோயிலுக்கு எண்ணற்ற சிறப்புகள் உண்டு. தஞ்சை பெரிய கோயில் பீடம் முதல் சிகரம் வரை முழுக்க, முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டு இருக்கிறது. இதற்காக மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் டன் எடை கொண்ட கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோயிலின் பிரம்மாண்ட அமைப்பு மேலும் பல அதிசயங்களை தாங்கி நிற்கிறது.