சபரிமலையில் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 15-ம் தேதி திறக்கப்பட்டது அன்றைய தினம் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் ரூ.47.12 கோடி வருவாய் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு ரூ.63.01 கோடி கிடைத்துள்ளது. 12 நாட்களில் கடந்த ஆண்டை விட ரூ.15.89 கோடி வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது. அப்பம் மற்றும் அரவணை விற்பனை மூலம் ரூ.32 கோடி வருவாய் வந்துள்ளது.