உக்ரைன் மீது ரஷ்யா சமீபத்தில் ஏவிய ஒரேஷ்னிக் ஏவுகணை பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஏவுகணை ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது என கூறப்படுகிறது. மேலும், 5,000 கி.மீ. வரை சென்று தாக்கும் இந்த ஏவுகணை 4,000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை வெளியிடும். அதாவது சூரியனின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலைக்கு இது சமம். இந்த வெப்பநிலையில் கெட்டியான இரும்புகளே உருகிவிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.