ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 7 ஆயிரம் பேர் இன்று (டிச., 02) மீன்பிடிக்கச் சென்றனர். உரிய அனுமதி சீட்டு பெற்று 9 நாட்களுக்குப் பிறகு மீனவர்கள் சென்றுள்ளனர். மேலும் இலங்கை கடற்படை தாக்குதல், சிறை பிடிப்பு மற்றும் இயற்கை சீற்றம் காரணமாக வருவாய் இழந்துள்ள மீனவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.