ரயில்வே விதிகளின்படி செல்லப் பிராணிகளை ரயிலில் அழைத்துச் செல்ல சில கட்டுப்பாடுகள் உள்ளன. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்டிகள் பார்சல் அலுவலகங்களில் கிடைக்கும். இதில் வைத்து செல்லப்பிராணிகளை ஏசி முதல் வகுப்பில் மட்டுமே கொண்டு செல்ல முடியும். இதற்காக ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். செல்லப்பிராணிகள் பிறருக்கு தொந்தரவு கொடுத்தால் ஊழியர்கள் அதை பெட்டியில் இருந்து வெளியேற்ற முடியும்.