ஏலக்காயில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற முக்கியமான தாதுக்கள் உள்ளன. இரவில் படுக்கும் முன் ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் வயிறு உப்பசம், வாய்வு, வயிற்று உபாதை, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் நீங்கும். இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக பருவநிலை மாற்றத்தின் போது ஏற்படும் சளி, இருமல், காய்ச்சலுக்கும் மருந்தாக பயன்படுத்தலாம். மேலும் இது இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.