தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15-ல் துவங்கியது. நவ. 1-ல் இருந்து 30ஆம் தேதி வரை மழைக்கு ஏழு பெண்கள் உட்பட 14 பேர் இறந்துள்ளனர். இவர்களில், 10 பேர் மின்னல் தாக்கி மரணமடைந்தனர். மழைக்கு 1,878 கால்நடைகள் பலியாகியுள்ளன. 81 குடிசைகள் முழுமையாகவும், 2,072 பகுதியாகவும், கான்கிரீட் வீடுகளில் எட்டு முழுமையாகவும், 663 பகுதியாகவும் சேதம் அடைந்ததாக வருவாய் துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.