மதுரையில் ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய மாணவிகள் தடுத்து நிறுத்தப்பட்டு தேசியகீதம் பாட வைக்கப்பட்டுள்ளனர். தேசியகீதம் பாடிய பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆளுநர் ரவி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்து பாடலில் இடம்பெற்ற திராவிடம் என்ற வார்த்தை புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.