1, 300 டன் யூரியா உரம் தஞ்சை வந்தது
கர்நாடகா மாநிலத்தில் இருந்து சரக்கு ரயிலில் ஆயிரத்து 300 டன் யூரியா உரம் தஞ்சை வந்தது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடப்பது வழக்கம். இதுதவிர உளுந்து, கரும்பு, வாழை, வெற்றிலை, பருத்தி, எள், மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவையும் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு தேவையான உரங்கள் வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி கர்நாடகா மாநிலத்திலிருந்து சரக்கு ரயிலின் 21 வேகன்களில் ஆயிரத்து 300 டன் யூரியா உரம் தஞ்சை ரயிலடிக்கு வந்தது. இந்த உர மூட்டைகள் தஞ்சை ரயிலடியில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களுக்கு கொண்டு. செல்லப்பட்டது.