தஞ்சாவூர் - Thanjavur City

தஞ்சை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

தஞ்சை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

தஞ்சாவூர் எல்ஐசி அலுவலக வளாகத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்வூதியர்  சங்கத்தின் சார்பில் நேற்று தலைவர் டி. ராஜசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வூதியர் சங்க நிர்வாகி                           கே. பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.   ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இன்சூரன்ஸ் சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். எல்ஐசி நிர்வாகம் கருணைத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். ஒவ்வொரு ஊதிய உயர்வு அமல்படுத்தும் பொழுது ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். அனைவருக்குமான குழுக் காப்பீட்டை வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு பிரிமியத்திற்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். மக்களுக்கு சேவை செய்யும் பொதுத்துறைகளான எல்ஐசி, ஜிஐசி நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்று  ஒன்றிய அரசுக்கும், எல்ஐசி  நிர்வாகத்திற்கும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.   ஆர்ப்பாட்டத்தில் முதல் நிலை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெய்சங்கர், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தலைவர் எஸ். செல்வராஜ் ஆகியோர் ஓய்வூதியர் தினத்தை வாழ்த்தியும், கோரிக்கைகளை விளக்கியும் சிறப்புரையாற்றினர். நிறைவாக ஓய்வூதியர் சங்கத்தின் நிர்வாகி எம். ரவிசங்கர் நன்றி கூறினார்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా