விமான விபத்துக்கள் குறித்து அமெரிக்காவின் Aviation Disaster Law மற்றும் Popular Mechanics இதழ்கள் ஆய்வு நடத்தின. இந்த தரவுகளின்படி விமான விபத்தின்போது பின் இருக்கைகளில் அமர்பவர்கள் பிழைப்பதற்கான வாய்ப்பு 40% அதிகமாக இருப்பதாகவும், அது முன்னோக்கி வரவர வாய்ப்புகள் குறைந்துகொண்டே செல்வதும் தெரியவந்துள்ளது. முன் சீட்டுகளில் அமர்பவர்களின் இறப்பு விகிதம் 38% ஆகவும், நடுத்தர சீட்டுகளில் அமர்பவர்களின் இறப்பு விகிதம் 39% ஆகவும் உள்ளது.