தஞ்சை: கலைஞர் கைவினைத் திட்டம், பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்

75பார்த்தது
தஞ்சை: கலைஞர் கைவினைத் திட்டம், பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்
“கலைஞர் கைவினைத் திட்டத்தின்கீழ் கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளோர் தொழில்களைத் தொடங்கவும், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.  
இத்திட்டத்தின் கீழ் புதிதாகத் தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர் பயன்பெறலாம். மேலும், ரூ. 3 லட்சம் வரையிலான பிணையற்ற கடன் உதவியும் தமிழக அரசால் 25 விழுக்காடு (அதிகபட்சம் ரூ. 50, 000 வரை) மானியம் மற்றும் 5 விழுக்காடு வரை வட்டி மானியம் வழங்கப்படும்.  
பயன்பெற msmeonline. tn. hov. in
என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். 11. 12. 2024 முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 35 வயது முதல் 55 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.  
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொழில் ஆர்வம் கொண்டவர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்டத் தொழில் மையங்கள் மூலமாகச் செயல்படுத்தப்படுகிறது.  

எனவே, ஆர்வமுள்ள தொழில் முனைவோர் இத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பபிப்பதற்கான வழிகாட்டுதல்கள் பெற மாவட்ட தொழில் மையம், நாஞ்சிக்கோட்டை ரோடு, உழவர் சந்தை அருகில், தஞ்சாவூர்-6 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 04362-255318 என்ற எண்ணில் தொலைபேசி வாயிலாகவோ அணுகுமாறு" மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம்
தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி