முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், "புத்தாண்டாகிய 2025-ல் உலகெங்கும் அமைதி திரும்பட்டும். நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும். இல்லந்தோறும் அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும். தமிழ்நாடு அதற்கு வழிகாட்டும். அனைவருக்கும் எனது உளம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.