அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து, 'யார் அந்த சார்' என்ற பதாகையை ஏந்தி அதிமுகவினர் கவனஈர்ப்பு பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். இது குறித்து இபிஎஸ், “அமைதியாக, ஒழுக்கத்துடன் பிரச்சாரம் மேற்கொண்டவர்களை கண்டு பதற்றமடைந்த விளம்பர மாடல் ஸ்டாலின் அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்குப் பதிந்திருப்பதற்கு எனது கடும் கண்டனம்" என்றார்.