நாகை: 8-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

68பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செம்பியன்மகாதேவியை கிராமத்தை சேர்ந்தவர் முருகதாஸ் அவர் தன்னுடைய மனைவி மற்றும் மகன் மகளுடன் கூரை வீட்டில் வசித்து வருகிறார். வங்கக்கடலில் உருவாகியுள்ள அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரமாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நள்ளிரவு குடிசை வீட்டில் குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்த முருகதாஸ் மற்றும் அவரது மகன் கவியழகன் அவரது மகள் மீது வீட்டின் பக்க வாட்டு சுவர் கனமழை காரணமாக உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது இடிந்து விழுந்தது.

இதில் கவியழகன் பலத்த காயமடைந்தார். இடிபாடுகளில் சிக்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மேலும் அவரது தந்தை மற்றும் தங்கை சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். கவியழகன் செம்பியன் மகாதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை அருகே கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி