சின்னத்திரை நடிகை விஜே சித்ரா கடந்த 2020ல் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் தந்தை காமராஜ் (64) இன்று (டிச. 31) காலை மகளின் துப்பட்டாவிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சித்ராவின் மரணத்திலிருந்தே வயிற்று வலி முதலான உடல் சார்ந்த பிரச்னைகள் ஒருபுறம் மற்றும் மகள் வழக்கு விவகாரமும் அவரை மன அழுத்தத்தில் ஆழ்த்தியது என்கின்றனர் உறவினர்கள். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.