டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் அஸ்வினை ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் பின்னுக்கு தள்ளியுள்ளார். பாக்ஸிங் டே டெஸ்டில் நாதன் லயன் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் அவர் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 7-வது இடத்தில் இருந்த அஸ்வினை (537) பின்னுக்கு தள்ளியுள்ளார்.