தஞ்சாவூர் - Thanjavur City

தஞ்சாவூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தஞ்சாவூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சிதலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்பஅட்டை, பட்டா மாற்றம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 500 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சிதலைவரிடம் வழங்கினர்.  மேலும், முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 நபர்கள் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலையும், தினசரி நாளிதழில் பணிபுரிந்து உடல்நலக்குறைவால் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களிடம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதி ரூ.2,25,000-க்கான காசோலையையும் மாவட்ட ஆட்சிதலைவர் வழங்கினார்.  இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர். மு. பாலகணேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், தனிதுணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சங்கர், ஆவின் பொது மேலாளர் சரவணகுமார் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా