சென்னை சேத்துப்பட்டு மற்றும் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதியானதாக தகவல் பரவிய நிலையில், தமிழ்நாட்டில் புதிய வைரஸ் தொற்று இல்லை என மருத்துவத்துறை விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக கர்நாடகா, குஜராத், கொல்கத்தாவில் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் HMPV வைரஸ் பரவல் இல்லை என கூறப்பட்டுள்ளது.