தை பொங்கல் விடுமுறை முடிந்து ஜனவரி 20ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அன்று முதல் தொடர்ச்சியாக 12 நாட்கள் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது ஜன.17ஆம் தேதிக்கு பதிலாக 25ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என அரசு தெரிவித்துள்ளது. அடுத்தநாள் (ஜன.26) குடியரசு தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை கட்டாயம் பள்ளிக்கு செல்ல வேண்டும். பின்னர் தொடர்ச்சியாக அடுத்த திங்கள் முதல் வெள்ளி வரை பள்ளிக்கு செல்ல வேண்டும். இதனால் 12 நாட்கள் தொடர்ச்சியாக பள்ளிகள் இயங்கும்.