நாகை அருகே வலிவலத்தில் மும்மதத்தினர் பங்கேற்கும் வீரமா காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் தப்பாட்ட இசை மற்றும் காளி நடனத்துடன் மின் அலாங்கார வாகனத்தில் அம்மன் வீதியுலா
நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள வலிவலத்தில் பழமை வாய்ந்த வீரமா காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 67 ஆம் ஆண்டு பங்குனித் திருவிழா மார்ச் 27 ஆம் தேதி பூச்சொரிதலுடன் துவங்கியது.
இந்து, முஸ்லீம், கிருஷ்தவர் என மும்மதத்தினரும் உபயதாரர்களாக நிதி பகிர்ந்து முன் நின்று நடத்தும் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மின் விளக்கு அலங்காரத்துடன் வீராமாகாளியம்மன் வீதியுலா காட்சி இரவு வெகு விமர்சையாக நடைப்பெற்றது. தப்பாட்ட பறை இசை மற்றும் தத்ரூபமாக காளியம்மன் வேடனமிட்ட நடன கலைஞரின் நடனத்துடன் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் வீடுகள் தோறும் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற ஊர்வலத்தின் போது இளைஞர்கள் பலரும் உற்சாக மிகுதியோடு நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.