திரௌபதி அம்மன் ஆலய தீமிதி உற்சவம்

50பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா புதுப்பள்ளியில் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வைகாசி உற்சவம் ஆனது கடந்த பதினெட்டாம் தேதி தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான நேற்று தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர். மேலும் பெண்கள் முளைப்பாரி எடுத்து கோவிலில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி