வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு

50பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வலிவலம், கொடி ஆலத்தூர், ஆதமங்கலம், கொளப்பாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை வீடுகளில் ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இதனை வளர்க்கும் உரிமையாளர்கள் ஆடுகளை முறையாக கட்டி வளர்க்காமல் சாலையில் தெரிய விடுவதால் விபத்துகள் ஏற்படுவதோடு அதற்கான நஷ்ட ஈடு தொகையை தங்களிடம் கேட்பதாக வாகன ஓட்டிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். எனவே அப்பகுதியில் ஆடு வளர்ப்பவர்கள் ஆடுகளை வீடுகளில் வளர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி