நாகை அருகே காருக்குடியில் வாழைத்தார், வாழைப்பூ மேல்நோக்கி வளரும் அதிசயம்;ஐந்து தலை நாகம் போல உள்ள வாழை மரத்தை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்த காருகுடியில் மகா மாரியம்மன் நாகம்மன் ஆலயத்தில் உள்ள தோட்டத்தில் வாழை மரங்கள் வளர்த்து வருகிறார். அதில் திருமணத்தடை நிவர்த்திக்கு ராகு கேது நாக தோஷங்கள் நிவர்த்தி செய்ய வாழை மரத்தில் தாலி கட்டி பரிகாரம் செய்யபட்டு வருகிறது. அது போல பரிகார நிவர்த்தி செய்யப்பட்ட ஒரு வாழை மரத்தில் நடந்த ஒரு ஆன்மீக அதிசய நிகழ்வு பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக வாழைமரங்களில் இலைக்கு மேல் இருந்தே குலை தள்ளுவது வழக்கம். வாழைத்தார் கீழ் நோக்கியே வளர்ந்து வாழைக்காய், கனியாக மாறும். ஆனால் இந்த கோவிலில் உள்ள வாழை மரத்தின் நடுவில் இருந்து குலை வெளிவர துவங்கியுள்ளது. வாழைப்பூ, வாழைத்தார் ஆகியவை மேல் நோக்கி வளர்கின்றன. அதுவும் ஐந்து தலை நாகம் போல ஐந்து காய்களை கொண்டு உருவாகி உள்ளது வளைந்து மேல் நோக்கிய வண்ணம் உள்ள இந்த அதிசய வாழை மரத்தை அப்பகுதி மக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் அந்த வாழை மரத்திற்கு மஞ்சள் துணி அணிவித்தும் பூக்கள் சாற்றி வழிபாடும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.