மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

61பார்த்தது
கிராம ஊராட்சிகளின் அத்தியாவாசிய பணிகளை மேற்க்கொள்ள ஊராட்சிகளுக்கான நிதியை உடனே வழங்க கோரி கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்

நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளின் நிர்வாகத்தை சீர்க்குலைக்கும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மாவட்ட செயற்க்குழு உறுப்பினர் சுபாஷ்சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கிராம ஊராட்சிகளில் அத்தியவாசிய பணிகளை மேற்க்கொள்ள உடனடியாக ஊராட்சிகளுக்கான நிதியை உடனே வழங்க வேண்டும், மத்திய, மாநில அரசுகளின் சார்பில் கட்டிக் கொடுத்த வீடுகளுக்கு இறுதி பில் தொகையை வழங்க கோரியும், கிராம ஊராட்சிகளில் நிலவும் தண்ணீர் தட்டுபாட்டினை நிவர்த்தி செய்ய வேண்டும், நூறு நாள் வேலை திட்ட பயனாளிகளின் சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி