நாகை விவசாயிகளுக்கு அறுவடைக்குப் பின்னர் மிஞ்சிய வைக்கோலை பயன்படுத்தி சிப்பி காளான் வளர்க்கும் பயிற்சி அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பாக எடுக்கப்பட்டது.
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் செயல்பட்டு வரும் அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள், விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி அளித்தனர். சிக்கல் பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கில் நடைபெற்ற பயிற்சியில், சிக்கல், பொன்வெளி, பனைமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். விவசாய நிலத்தில் காளான் வளர்த்து கூடுதல் வருமானம் ஈட்ட உதவுவதோடு, புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. காளான் வளர்ப்பில் உள்ள நன்மைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நெற்பயிரிடும் விவசாயிகள் அறுவடைக்குப் பின்னர் மிஞ்சிய சிறிதளவு வைக்கோலை பயன்படுத்தி சிப்பி காளான் வளர்த்து இருமடங்கு வருவாய் பெரும் வகையில் நடைபெற்ற பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.