உயர் விளைச்சல் குறித்த மூன்று நாள் பயிற்சி வகுப்பு

85பார்த்தது
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள குறுக்கத்தி உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் செயல்பட்டு வரும் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நஞ்சற்ற உணவு உற்பத்தி மற்றும் உயர் விளைச்சல் குறித்து பயிற்சி மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. தொடக்க நிகழ்ச்சியில்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாண்மை இணை இயக்குனர் கண்ணன் பேசுகையில் சேர்க்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து உற்பத்தி செய்யப்படும் விஷம் கலந்த உணவுகளால் உணவால் குறைந்த வயதினருக்கு இருதய நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் மக்களை பாதுகாக்க செயற்கை உரங்களை பயன்படுத்துவதை கைவிட்டு இயற்கையான முறையில் விவசாயம் செய்து நஞ்சற்ற உணவை மக்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி