நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பாலக்குறிச்சி வயல்வெளி அருகே கடந்த 13 ஆம் தேதி துர்நாற்றம் விசுவதாக, ஆடு மாடு மேய்க்க சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கினர். குறிச்சி கிராமத்தில் தனியே ஒற்றை குடிசையில் வசித்த கிரேஸ் என்ற மூதாட்டியை 10 நாட்களாக காணவில்லை என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் காவல்துறை விசாரணை செய்ததில் தெரியவந்தது.
பின்னர் அந்த மூதாட்டியின் ஜெப மாலை, காலணியை வைத்தும், மருத்துவ உடற்கூறு ஆய்வு சோதனையை வைத்தும் உயிரிழந்தது கிரேஸ் என்பது தெரியவந்துள்ளது.
இலங்கையில் பிறந்த கிரேஸ், சிங்கப்பூர் வேலைக்கு சென்றபோது பிலிப் ஜேசுதாஸ் என்பவரை திருமணம் செய்து சிங்கப்பூர் சிட்டிசனாக மாறினார். 2 மகன்கள், 2 மகள்கள் பிறந்த நிலையில் அனைவருமே வெளியூரில் திருமணம் செய்துவிட்டு சென்ற நிலையில், ஒரே மகன் சிங்கப்பூரில் இருக்கும் பிரபல நாடக நடிகர் , யூட்யூப் புகழ் சிங்கை துரைராஜ் என்பவர் குறிச்சியில் பல லட்சரூபாய்க்கு பிரமாண்டமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். ஆனால் அந்த வீட்டை பூட்டி இருக்கும் நிலையில் தாய் கிரேஸ் கூரை வீட்டில் வசித்து வந்தது பெரிய வந்துள்ளது