மதுரை மாவட்டம் உசிலம்பட்டி விக்கிரமங்கலம் அருகே நரியம்பட்டி தெற்கு தெருவில் வசிக்கும் சோணமுத்துவின் மகன் பூமிநாதன் (26) என்பவர் நேற்று முன்தினம் (மார்ச் 31) இரவு 7 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டி மதுரை மெயின் ரோட்டில் வடக்கம்பட்டி சந்திப்பில் மலையாண்டி காம்ப்ளக்ஸ் அருகே சென்று கொண்டிருந்தபோது தேனி ஆண்டிப்பட்டி சேர்ந்த சரத்குமார் (30) என்பவர் ஓட்டி வந்த இண்டிகா கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் பூமிநாதன் படுகாயமடைந்து உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை சோணமுத்து உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.